புற்றுநோயாளியின் அனுபவம் குறித்த கருத்தாய்வுக்கான இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இக்கருத்தாய்வு NHS England சார்பாக Picker Institute Europe என்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
புற்றுநோயாளியின் அனுபவம் குறித்த கருத்தாய்வு, பங்கேற்பதற்கான அழைப்பைப் பெற்றுள்ள நோயாளிகளுக்கானது. நீங்கள் மின்னஞ்சலில் ஒரு கருத்தாய்வுக்கான அழைப்பைப் பெற்றிருந்தால், நாங்கள் உங்களின் புற்றுநோய் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அனுபவங்களைப் பற்றி கேட்க விரும்புகிறோம். நீங்கள் இணையம் வழியாகக் கருத்தாய்வை நிறைவுசெய்ய விரும்பினால், கீழே உள்ள ‘இணையம் வழியாகக் கருத்தாய்வில் கலந்துகொள்க’ என்ற பொத்தானைக் கிளிக் செய்து, உங்கள் கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள அணுகல் குறியீட்டை உள்ளிடவும் அல்லது கேள்வித்தாளின் முன்பகுதியில் உள்ள உங்களின் தனிப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். இக்கருத்தாய்வை நிறைவு செய்ய உங்களுக்கு 20 நிமிடங்களுக்கும் குறைவாகவே செலவாகும்.
புற்றுநோய் தொடர்பான சிகிச்சைக்காக NHS மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள அல்லது புற்றுநோய் தொடர்பான சிகிச்சைக்காக பகல்நேர நோயாளிகளாக சிகிச்சை பெற்ற மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற, புற்றுநோய் இருப்பதாகப் பரிசோதனையில் முதன்மையாகக் கண்டறியப்பட்டுள்ள அனைத்து வயதுவந்த நோயாளிகளுக்கும் (16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்) கருத்தாய்வு அழைப்பு அனுப்பப்படுகிறது.
நீங்கள் பெற்றுள்ள பராமரிப்பு குறித்து கருத்து தெரிவிக்க இந்தக் கருத்தாய்வு உங்களை அனுமதிக்கிறது. பராமரிப்பு எங்கு சிறப்பாகச் செயல்படுகிறது மற்றும் NHS புற்றுநோய் சேவைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்வதற்கு உங்கள் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. கருத்தாய்வின் முடிவுகள் தேசிய, பிராந்திய மற்றும் உள்ளூர் மட்டத்தில் புற்றுநோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்த வழங்குநர்களால் பயன்படுத்தப்படும்.
கருத்தாய்வைப் பூர்த்திசெய்வதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் (உதாரணமாக தமிழ்) -இல் அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து 0800 103 2804 என்ற எண்ணில் எங்களின் இலவச தொலைபேசி உதவி எண்ணை அழைக்கவும். கருத்தாய்வைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், எங்களின் ‘உதவி மற்றும் ஆதரவு’ பக்கத்தைப் பார்வையிடவும்.